பால்குட அபிஷேகம்
பாகூர்: பிள்ளையார்குப்பம் முத்து மாரியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம் நடந்தது.இக்கோவிலின், சாகை வார்த்தல் மற்றும் செடல் திருவிழா கடந்த 9ம் தேதி நடந்தது. தொடர்ந்து, நேற்று அம்மனுக்கு பால்குட அபி ேஷகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு பிள்ளையார்குப்பம் புத்து கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்கியது. திரளான பெண்கள் பங்கேற்று பால் குடங்களை சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைத்தனர். 11:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.