உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

திருக்கனுார்; வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். கருத்தரங்கில், திருக்கனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, போதைப்பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், புதிய குற்றவியல் சட்ட நடைமுறை விதிகள், சைபர் கிரைம் மோசடி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, போக்சோ சட்டம் மற்றும் அதன் தண்டனை விவரங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியை ரேணு நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் வேலவன், லட்சுமணன், சபரிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை