உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வளர்கலைக் கூடத்தில் படைப்புகளை காட்சிப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

வளர்கலைக் கூடத்தில் படைப்புகளை காட்சிப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஓவியர்கள், சிற்பிகளிடம் இருந்து வளர்கலைக் கூடத்தில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஓவியம், சிற்பம், புகைப்படம் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்த கலை, பண்பாட்டுத்துறை மூலம் அரசு அருங்காட்சியகத்திற்கு அருகே எளிய முறையில் வளர்கலைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்கலை கூடத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். இங்கு, ஓவியங்கள், சிற்பங்களை காட்சிப்படுத்த ஓவியர்கள், சிற்பிகள் எளிதில் பயன் பெறும் வகையில், இணையவழி மூலமாக தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, கலை பண்பாட்டுத் துறை முறைப்படுத்தி உள்ளது.இதற்காக, கலை படைப்புகளை காட்சிப்படுத்த, ஓவியர்கள் மற்றும் சிற்பிகளிடம் இருந்து விண்ணப்பங்களை கலை பண்பாட்டுத்துறை வரவேற்கிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளை கலை பண்பாட்டுத்துறை art.py.gov.inஎன்ற இணைய தளத்தில் காணலாம். பின்னர், வல்லுநர் குழு ஓவியர்களின் படைப்புகளை ஆராய்ந்து தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில் புதுச்சேரி கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த ஆவண செய்யப்படும். புதுச்சேரி கலைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகக் குறைந்த கட்டணத்தில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. எனவே, புதுச்சேரி கலைஞர்கள், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு ஓவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வரும் 23ம் தேதி முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பரிசீலித்த பிறகு நவம்பர் முதல் படைப்புகளை காட்சிப்படுத்த ஒதுக்கீடு வழங்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை