உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக் மாணவர் சேர்க்கை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், கன்வீனர் நியமனம்

சென்டாக் மாணவர் சேர்க்கை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், கன்வீனர் நியமனம்

புதுச்சேரி: சென்டாக் மாணவர் சேர்க்கையின் ஒருங்கிணைப்பாளராக உயர் கல்வித் துறை இயக்குநர் அமன்சர்மா, கன்வீனராக செரில் ஆன் ஜெனார்டின் சிவம் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை அமைப்பாக சென்டாக் உள்ளது. இந்த சென்டாக் அமைப்பு கல்வித் துறை செயலரை சேர்மனாக கொண்டு 9 பேர் உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினரால் நடத்தப்படுகின்றது. இந்த உயர்மட்ட மாணவர் சேர்க்கை அமைப்பில் துணை சேர்மனாக சுகாதார துறை செயலர், உறுப்பினர்களாக சுகாதார துறை, உயர்கல்வி, பள்ளி கல்வித் துறை இயக்குநர்கள், சுகாதார துறை, உயர்கல்வி துறை சார்பு செயலர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர, அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர், கன்வீனரும் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகின்றனர்.இந்த 2025-26 கல்வியாண்டிற்கான அட்மிஷன் ஒருங்கிணைப்பாளராக உயர் கல்வித் துறை இயக்குநர் அமன்சர்மா, சென்டாக் கன்வீனராக வில்லியனுார் கஸ்துார்பா மகளிர் கல்லுாரி முதல்வர் செரில் ஆன் ஜெனார்டின் சிவம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பினை உயர்கல்வித் துறை சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ