உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் மூலநாதர் கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு

பாகூர் மூலநாதர் கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலை, தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால், கோவிலின் மகா மண்டபம், அர்த்த மண்டபம், நடராஜர் மண்டபம் உள்ளிட்டவைகள் சேதமான நிலையில், கண்டு கொள்ளப்படாமல் இருந்து வருவதால், கோவிலின் உறுதி தன்மை கேள்விக்குறியாக உள்ளது. கோவிலை முழுமையாக சீரமைத்திட வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது.இந்நிலையில், தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து, உதவி பொறியாளர் ஈஸ்வர், முதுநிலை பராமரிப்பாளர் இஸ்மைல் ஆகியோர் நேற்று மதியம் பாகூர் மூலநாதர் கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது, பொது மக்கள் தரப்பில்,''கோவிலின் உள்ளே மழை நீர் தேங்கி நிற்பதால், பக்தர்களும், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்து வருவதாகவும், பாதுகாப்பு மதில் சுவரின் உயரம் குறைவாக இருப்பதாக, பராமரிப்பு பணி சரியாக இல்லை என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.அதற்கு, தொல்லியல் துறை அதிகாரிகள், முதற்கட்டமாக, மடப்பள்ளி, அர்த்த மண்டபம், மகா மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடராஜர் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்றால், வெளிப்பகுதியில் உள்ள கடைகளை காலி செய்த பின்னரே, சீரமைப்பு பணிகளை துவங்கிட முடியும் என்றனர். பின்னர், இது தொடர்பாக, தொல்லியல் துறை அதிகாரிகள், செந்தில்குமார் எம்.எல்.ஏ., விடம் ஆலோசனை நடத்தி விட்டு புறப்பட்டு சென்றனர்.ஆய்வின்போது, கோவில் நிர்வாக அதிகாரி பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் அர்ச்சகர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ