உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா? தமிழிசைக்கு எதிர்க்கட்சி தலைவர் சவால்

பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா? தமிழிசைக்கு எதிர்க்கட்சி தலைவர் சவால்

புதுச்சேரி : கவர்னர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா என கவர்னர் தமிழிசைக்கு, எதிர்க்கட்சி தலைவர் சிவா சவால் விடுத்துள்ளார். புதுச்சேரி தி.மு.க., மாணவர் அணி சார்பில், நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், அவர், பேசியதாவது; ஜிப்மர் ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் இயக்கு நரின் பணி காலத்தை ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு 2வது முறையாக நீட்டிப்பு செய்தது கண்டிக்கதக்கது.மத்திய அரசு ஆதரவுடன் ஆட்சி நடத்தும் முதல்வர் கடந்த 3 ஆண்டில் ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கவர்னர் தமிழிசை மத்திய அரசு நிதி பெற்று மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதை விடுத்து, தமிழக அரசியலில் மூக்கை நுழைக்கிறார். புதுச்சேரி அரசை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கிறார்.தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் ராதாபுரம், வேளச்சேரி தொகுதியிலும், எம்.பி., தேர்தலில் வடசென்னை, துாத்துக்குடி தொகுதிகளில் தமிழிசை போட்டியிட்டு 'டிபாசிட்' இழந்தவர்.அவர், கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தியுங்கள். அப்போது தெரியும் உங்கள் செல்வாக்கு. மக்கள், அரசியல்வாதிகள், முதல்வர் ரங்கசாமி தனக்கு ஆதரவாக இருப்பதாக நினைத்து அவர், புதுச்சேரியில் போட்டியிட்டால், தி.மு.க., வேட்பாளரை களம் இறக்கி வெற்றி காண்போம்.இதை கவர்னர் தமிழிசை சவாலாக எடுத்து கொள்ளலாம். தி.மு.க., தலைவர்களை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு, கவர்னராக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர், பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை