மேலும் செய்திகள்
கடற்கரை கிராமங்களில் அமைச்சர் பார்வை
28-Nov-2024
அமைச்சர் ஆய்வுபுதுச்சேரி: ஆரியப்பாளையம் பாலம் இணைப்பு சாலையில் விரிசல் ஏற்பட்டதை அமைச்சர் லட்சுமிநாராயணன் பார்வையிட்டார்.புதுச்சேரி - விழுப்புரம் இணைக்கும் முக்கிய வழித்தடமான 45 ஏ தேசிய நெடுஞ்சாலையில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ. 60 கோடி மதிப்பில் 360 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டி முடித்து கடந்த அக்., 28ம் தேதி திறக்கப்பட்டது. பாலத்தின் கீழக்கு பகுதியில் உள்ள இணைப்பு தார் சாலையில், 4 மீட்டர் துாரத்திற்கு விரிசல் விழுந்துள்ளது. இதனை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.விரிசலை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.
28-Nov-2024