உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுதபூஜை விழா

ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுதபூஜை விழா

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் உள்ள நரேந்திர மோடிஜி தலைமை ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, ஆட்டோ ஸ்டாண்டின் புதிய பெயர் பலகையை திறந்து வைத்து, சங்கத்தில் உள்ள 40 உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கிரைண்டர், 10 கிலோ அரிசி மற்றும் சீருடை ஆகியவற்றை வழங்கி, வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில், மண்ணாடிப்பட்டு தொகுதி பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், மோரிஸ், பாரதி, அசோக், அப்பு, பாலா மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளர் மற்றும் மதர் குளோரி நீட் அகாடமியின் இயக்குனர் அந்துவான், பா.ஜ.க., ஓ.பி.சி., அணி மாநில பொறுப்பாளர் சாம்ராஜ், உருளையன்பேட்டை தொகுதி தலைவர் சக்திவேல், ராபர்ட் கிளைவ் , ஆட்டோ சங்கத் தலைவர் மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ