உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாஜி ராணுவ வீரர்கள் கவுரவிப்பு

 மாஜி ராணுவ வீரர்கள் கவுரவிப்பு

புதுச்சேரி: சுதந்திர தினத்தையொட்டி ஸ்டேட் வங்கியின் ஆயுள் காப்பீட்டுக் குழுவின் சார்பில், முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் காப்பீட்டுக் கழகத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த 50 முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஸ்டேட் வங்கி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் புதுச்சேரி கிளை மேலாளர் அலைஸ் புனிதா ராணி காப்பீட்டுக் கழகம் முன்னாள் ராணுவ வீரர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், அளித்து வரும் வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வங்கி ஆயுள் காப்பீட்டுக் கழகம் சார்பில், உதயகுமாரி, வசந்த் ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க தலைவர் மோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை