நறுமண பயிர்கள் சாகுபடி செயல் விளக்கம்
திருபுவனை : புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் ஆத்மா திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கு கிழங்கு மற்றும் நறுமண பயிர்கள் சாகுபடி செயல்விளக்கம் மதகடிப்பட்டில் நடந்தது. முகாமில் வேளாண் அலுவலர் நடராஜன் நறுமணப் பயிர்கள் மற்றும் கிழங்கு பயிரிடும் நவீன முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். நிகழ்ச்சியில் வெற்றிலை, வள்ளிக் கொடி கிழங்கு, மா, இஞ்சி, வெள்ளை கஸ்துாரி மஞ்சள் ஆகிய விதை கரணைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஸ்வரி மற்றும் செயல்விளக்க உதவியாளர் ஜெயசங்கர், சண்முகம், சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.