உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகராறில் ஈடுபட்டவர் கைது

தகராறில் ஈடுபட்டவர் கைது

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் மேல்குமாரமங்கலம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நடராஜன் 40, இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மது போதையில் மடுகரை தனியார் கம்பெனி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்கள், கம்பெனியில் இருந்து பணி முடிந்து வரும் பெண்களை பார்த்து ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும், நடராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த மடுகரை போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுப்பட்ட நடராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ