உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமிக்கு கட்டாய தாலி வாலிபர் கைது

சிறுமிக்கு கட்டாய தாலி வாலிபர் கைது

புதுச்சேரி : சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பொன்னம்பூண்டியை சேர்ந்தவர் ரமேஷ், 27; திருக்கனுாரில் உள்ள பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வருகிறார்.இவர், அப்பகுதியில் உள்ள நகை கடையில் வேலை செய்த வரும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அந்த சிறுமி கடையில் இருந்து வீட்டிற்கு சென்றபோது, பின் தொடர்ந்து சென்ற ரமேஷ், வீடு புகுந்து சிறுமிக்கு கட்டாய தாலி கட்டினார்.அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ரமேஷை பிடித்து தர்ம அடி கொடுத்து திருக்கனுார் போலீசில் ஒப்படைத்தனர்.அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, ரமேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி