கலை இலக்கிய விழா
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை இலக்கிய விழா, பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வள்ளி, கிருஷ்ணகுமார், நமச்சிவாயம், லட்சுமிதேவி, சரஸ்வதி வைத்தியநாதன், ராஜேஷ், மீனாட்சிதேவி, வேல்விழி சிவக்கொழுந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கவிஞர் மண்ணாங்கட்டி வரவேற்றார். விழாவையொட்டி நடந்த விடுதலை நாள் சிறப்பு கவியரங்கத்தில் பங்கேற்ற கவிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்னாள் துணை ஆணையர் சண்முகசுந்தரம், ரமேஷ் பைரவி, மதன், ஏகாம்பரம் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில், புதுச்சேரி, தமிழ்நாட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கவிதை வாசித்தனர்.கவிஞர் விசாலாட்சி நன்றி கூறினார்.