அருணா சி.டி., ஸ்கேன் மையம் திறப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் அருணா சி.டி., ஸ்கேன் மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகில், தாவரவியல் பூங்கா எதிரில் அமைந்துள்ள அருணா சி.டி., ஸ்கேன் மையத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். விழாவில், அருணா சி.டி., ஸ்கேன் நிர்வாக இயக்குநர் வீரமணி தலைமை தாங்கி, வரவேற்றார். முதன்மை செயலாக்க அதிகாரி அழகரசன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்,முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள், அருணா லேப் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புதிய சி.டி. ஸ்கேன் மையம் தொடங்கப்பட்டதன் மூலம், பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும் என, அருணா சி.டி., ஸ்கேன் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.