மேலும் செய்திகள்
அசோக் ஆனந்த் முதல்வரிடம் ஆசி
10-Oct-2026
புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்., சார்பில் வெற்றி பெற்ற அசோக் ஆனந்த் இன்று எம்.எல்.ஏ.,வாக பதவியேற்கிறார். புதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தலில் என்.ஆர்.காங்., கட்சி மொத்தம் 16 இடங்களில் போட்டியிட்டு, 12 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் விதிகளின்படி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. என்.ஆர்.காங்., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் களமிறக்கப்பட்டார். 11 வேட்பாளர்களுடன் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் என்.ஆர்.காங்., வேட்பாளராக போட்டியிட்ட அசோக்ஆனந்த் வெற்றி பெற்றார். அதையடுத்து, இன்று காலை 9.00 மணிக்கு தற்காலிக சபாநாயகர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ., பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அசோக் ஆனந்த்திற்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
10-Oct-2026