உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவியிடம் அத்துமீறல்: மேலும் ஒருவருக்கு வலை

மாணவியிடம் அத்துமீறல்: மேலும் ஒருவருக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில்அத்துமீறி நுழைந்து, மாணவியிடம் அத்துமீறிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில்கடந்த 11ம் தேதி,நுழைந்த சிலர், மாணவி ஒருவரிடம் அத்துமீறினர். அதில் பாதித்த மாணவி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.பல்கலை நிர்வாகம் நடத்திய விசாரணையில் அத்துமீறலில் ஈடுபட்டது. பல்கலை ஆடிட்டோரியத்தில்பணிபுரியும்ஒப்பந்த ஊழியர் மற்றும் அவரது உறவினர்கள் என தெரியவந்தது.பல்கலை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார்அத்துமீறி நுழைந்து, ஆபாசமாக திட்டிய பிரிவுகளில் வழக்கு பதிந்து அரும்பார்த்தபுரம் ஷாம், 19; கல்லுாரி மாணவரான வில்லியனுார் விமல், 19; மற்றும் இரு சிறுவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி இரு வாலிபர்களை சிறையும், இரு சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லுாரி மாணவரான பிள்ளைச்சாவடி ஆனந்த் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை