உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி மீது தாக்குதல்

தொழிலாளி மீது தாக்குதல்

புதுச்சேரி : முன்விரோதத்தில் பூக்கடை தொழிலாளியை உருட்டுகட்டையால் தாக்கி கொலை மிரட்டல் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.பெரிய காலாப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் 23, இவர் பாக்கமுடையன்பட்டில் உள்ள நண்பர் மனோகரன் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 8.45 மணியளவில் முன் விரோதம் காரணமாக செந்தில் மற்றும் அவருடன் வந்த இருவர் பூக்கடையில் இருந்த பாலமுருகனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பலத்த காயமடைந்த பாலமுருகன் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.புகாரின் பேரில் தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து செந்தில் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !