உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெஞ்சு வலியால் ஜோதிடர் சாவு

நெஞ்சு வலியால் ஜோதிடர் சாவு

புதுச்சேரி : திருநெல்வேலி மாவட்டம், திருமலையப்புரம் அடுத்த தெற்குகடையம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன், 42; கைரேகை பார்க்கும் ஜோதிடர். இவரது அண்ணனும், ஜோதிடர். இவர்களின் உறவினர்கள் புதுச்சேரியில் இருப்பதால், முருங்கப்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து, அண்ணனுடன் சேர்ந்து ஜோதிடம்பார்த்து வந்தார்.இந்நிலையில், வீட்டில் இருந்த அவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை அரசு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை