மேலும் செய்திகள்
சிங்கம்புணரியில் அணிவகுத்த விநாயகர் சிலைகள்
30-Aug-2025
வில்லியனுார்; வில்லியனுார் அருகே டி.டி.எச்., டிஷ் அமைக்கும் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். வில்லியனுார் அடுத்த ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சேர்ந்தவர் முருகன் மகன் ஜெயசீலன், 26; டி.டி.எச்., டிஷ் அமைக்கும் பணி செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது அண்ணன் மணிகண்டன், முத்துப்பிள்ளைபாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ், 27, என்பவரிடம் தகராறு செய்தார். பின், கிருஷ்ணராஜ், ஜெயசீலன் வீட்டிற்கு சென்று, 'உனது அண்ணன் என்னை தாக்கிவிட்டு, என் மீதே போலீசில் புகார் கொடுத்துள்ளார்' என்றார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஜெயசீலன் மற்றும் அவரது தாயை கிருஷ்ணராஜ் தாக்கினார். இது குறித்து ஜெயசீலன், அவரது தாயுடன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுக்க சென்றபோது, அவர்களை வழிமறித்த கிருஷ்ணராஜ் மற்றும் அவரது நண்பர்கள் லோகேஷ், ரமேஷ் ஆகியோர் சவுக்கு கட்டை, சென்ட்ரிங் பலகையால் சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ஜெயசீலன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து லோகேைஷ கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
30-Aug-2025