மேலும் செய்திகள்
அனுமதியின்றி பேனர்; உதவிப்பொறியாளர் புகார்
28-Jun-2025
அரியாங்குப்பம் : முன்விரோத தகராறில், விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.அரியாங்குப்பம் அடுத்த ஓடைவெளியை சேர்ந்தவர் மோகன், 45; விவசாயி. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் ஜோதி, 40. இவர்களுக்கிடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி தோப்பில் இளநீர் பறித்தாயா என ஜோதி, மோகனிடம் கேட்டார். இது தொடர்பாக, இவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஜோதி, மோகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மோகன் புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜோதியை தேடி வருகின்றனர்.
28-Jun-2025