உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்வர் மீது தாக்குதல்

சர்வர் மீது தாக்குதல்

புதுச்சேரி: நெல்லித்தோப்பு, அண்ணா நகரை சேர்ந்த பால்ராஜ், 48; ஓட்டல் சர்வர். இவர் நெல்லித்தோப்பு கஸ்துாரிபாய் நகரை சேர்ந்த கணேஷ் என்பவரிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின், அசல் மற்றும் வட்டி பணத்தை செலுத்திய நிலையில், ரூ.5000 மட்டும் பால்ராஜ் கொடுக்கவில்லை என தெரிகிறது.கடந்த 14ம் தேதி பால்ராஜ், நெல்லித்தோப்பு மாதா கோவில் அருகே நண்பரை சந்திக்க சென்ற போது, அங்கு வந்த கணேஷ் மீதி பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டு, இரும்பு கம்பியால் பால்ராஜை தாக்கினார். காயமடைந்த பால்ராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை