ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட முயற்சி
பாகூர்: பாகூரில் ரைஸ் மில்லின் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த குருவிநத்தம், பெரியார் நகர் புத்து கோவில் அருகே ரைஸ் மில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வேலையை முடித்து விட்டு ரைஸ் மில்லை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவு நேரத்தில் ரைஸ் மில்லில் இருந்து சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்துபோது, ரைஸ் மில் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.அதில், ஒருவரை பொது மக்கள் மடக்கி பிடித்து, பாகூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரைஸ் மில்லின் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.