மேலும் செய்திகள்
வங்கி ஊழியரிடம் மொபைல் போன் பறிப்பு
26-Oct-2024
புதுச்சேரி : முதலியார்பேட்டையில் வங்கி கழிப்பறை வெண்டிலேட்டரை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி கடலுார் சாலை, முதலியார்பேட்டை ஏ.எப்.டி., மில் எதிரில் இந்தியன் வங்கி உள்ளது. கடந்த 8ம் தேதி வழக்கம்போல் வங்கி பணிகள் முடிந்து வங்கி மூடப்பட்டது. மறுநாள் 9ம் தேதி விடுமுறை என்பதால், மதியம் 1:00 மணிக்கு 4 ஊழியர்கள் மட்டும் நிலுவையில் உள்ள வங்கி பரிவர்த்தனை பணிகளை மேற்கொள்ள வங்கிக்கு வந்தனர். அப்போது, பெண் ஊழியர்கள் கழிப்பறையின் வெண்டிலேட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், 9ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு, கழிப்பறை வெண்டிலேட்டர் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.வங்கியின் அனைத்து மேசைக்கும் சென்று அங்கிருந்த சாவிகள் மூலம், பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கரை திறக்க முயற்சித்தார். எந்த சாவியாலும் லாக்கர் திறக்க முடியவில்லை. இதுனால் வெறுத்துபோன அவர், வங்கிக்குள் இருந்த பாஸ்புக் பிரிண்டிங் மிஷினை, ஏ.டி.எம்., இயந்திரம் என, நினைத்து உடைத்தார். அதிலும் பணம் இல்லாததால், மேசை மீது இருந்த டேப்லெட்டை திருடிக் கொண்டு வந்த வழியாகவே தப்பிச் சென்றார். இவை அனைத்தும் சி.சி.டி.வி.வில் பதிவாகி உள்ளது.இது தொடர்பாக வங்கி கிளை மேலாளர் பிரசாந்த்சிங் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்ம நபரை பிடிக்க சென்னை விரைந்துள்ளனர்.
26-Oct-2024