மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
16-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரி அரசு கல்வித்துறையில் கவுரவ முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ பால சேவிகாக்கள் ஆகியோருக்கு, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் தொடர் போராட்டம் அறிவித்தனர்.அதன் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் நுழைவு வாயிலில் கோரிக்கைகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாரி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலகுமார், ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் அருள்சாமி, சிரில் நிக்கோலஸ் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் சிறப்புரையாற்றினார். இதில் பால சேவிகாக்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் பொற்செழியன் நன்றி கூறினார்.
16-Jul-2025