உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காரைக்கால்: காரைக்காலில் கிராம பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் சதிஷ்குமார் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2011ல், புதுச்சேரி மாநில கொம்யூன் கிராம பஞ்சாயத்துகளில் தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களை நிரந்தரம் செய்யவும், அவர்களுக்கு 33 மாத நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை