உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காது கேளாமையில் பரிசோதனை அவசியம் ஆடியாலஜி டாக்டர் அட்வைஸ்

காது கேளாமையில் பரிசோதனை அவசியம் ஆடியாலஜி டாக்டர் அட்வைஸ்

புதுச்சேரி: உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு, டெசிபல் ஆடியாலஜி விழிப்புணர்வு குறித்து டாக்டர் வாசுதேவன் கூறிய தாவது:மனிதனுக்கு கேட்கும் திறன் இன்றியமையாதது. ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்வதற்கு காது கேட்கும் திறன் முக்கியம். காது கேளாமை குறைபாட்டிற்கு மருத்துவ பரிசோதனை அவசியம். மருந்து அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த கூடிய நிலைகளை டாக்டர் பரிசோதனை இல்லாமல் கண்டுபிடிக்க முடியாது.காது கேளாமை பல சமயங்களில் காது இரைச்சல், தலை சுற்றல்களோடு சேர்ந்து வரும். இவற்றை மருத்துவ பரிசோதனைகள் மூலம் ஆராய்ந்து மருந்துகள் மற்றும் உடல் பயிற்சி மூலம் கட்டுபடுத்தி, டாக்டர் சிபாரிசுக்கு பிறகே காது கருவிகள் பொருத்த வேண்டும்.காது கேட்கும் திறன் சரி செய்யாவிட்டால் நரம்புகள் மந்தமடைந்து, பின், தாமதமாக முயற்சி செய்யும் போது முழு பலன் கிடைக்காது. காது கேட்கும் திறனை அறிந்து கொள்ள ஆடியோகிராம் பரிசோதனை செய்ய படுகிறது. காது கேட்கும் கருவிகள் ஒலி அளவை அதிகப்படுத்தினால் போதாது. பேசுவதை தெளிவாக புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்க வேண்டும்.காது கேட்கும் கருவிகள் மிக சிறிய, டிஜிட்டல் கருவிகளாக உருவாகி உள்ளன. சார்ஜ் செய்யக்கூடிய மாடல்கள் பயன்பாட்டை எளிதாக்கி விட்டன. காது கருவிகளை ரீ-புரோகிராம் செய்து மாற்றமுடியும்.சிறந்த நிறுவன கருவிகளை வாங்கினால், சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் நம்பிக்கையாக இருக்கும். பிரபலமான நிறுவனங்களில் கருவிகளை வாங்குதல் பாதுகாப்பாக இருக்கும்.இவ்வாறு டாக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி