அரவிந்தர் கல்லுாரி பட்டமளிப்பு விழா
புதுச்சேரி : சேதராப்பட்டு, அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 22வது பட்டமளிப்பு விழா, கலையரங்கத்தில் நடந்தது. கல்லுாரி தலைவர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவசங்கரி வரவேற்று, பட்டமளிப்பு ஆண்டறிக்கை வாசித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கல்லுாரி மேம்பாட்டு சபை, கல்வித்தலைவர் கோபிநாத் பங்கேற்று, பல்கலைக்கழக அளவில் தேர்ச்சி பெற்ற 350 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, வாழ்த்தி பேசினார். கல்லுாரி நிர்வாக அதிகாரி திலகவதி, பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.