உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஷவர்மா, மயோனைஸ் சாப்பிட்ட 33 பேர் அட்மிட் ஹோட்டலை இழுத்து மூடிய அதிகாரிகள்

ஷவர்மா, மயோனைஸ் சாப்பிட்ட 33 பேர் அட்மிட் ஹோட்டலை இழுத்து மூடிய அதிகாரிகள்

சென்னை : சென்னை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் சாப்பிட்ட 33 பேர், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.சென்னை, அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில், 'பிலால்' பிரியாணி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல்களில் நேற்று முன்தினம் உணவு சாப்பிட்ட, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 21, ஜெய்சங்கர், 20, ஷாம், 20, உள்ளிட்ட 33 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர்.இதுகுறித்து, அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, போலீசார் தகவல் தெரிவித்தனர்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள பிலால் ஹோட்டலில், நேற்று ஆய்வு செய்தனர். காவல் துறையுடன் இணைந்து, உணவகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.33 பேர் பாதிக்கப்பட்டதற்கு, தரமற்ற தயாரிப்புகளான பீப் ஷவர்மா மற்றும் மயோனைஸ் தான் காரணம் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை