உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு வலை

மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு வலை

புதுச்சேரி: உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி,30; ஆட்டோ டிரைவர். இவருக்கும் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பாலாஜி அடிக்கடி மனைவியின் நகைகளை அடகு வைத்து மது குடித்து வந்தார். பாலாஜிக்கு வேறு ஒரு பெண்ணிடமும் தொடர்பு இருந்தது. இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால், அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டிற்கு சென்றார். லாஸ்பேட்டை வந்த பாலாஜி தனது மனைவியிடம் பணம் கேட்டார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாலாஜி, மனைவியை தாக்கி, வீச்சரிவாளை காட்டி மிரட்டினார். அவரது மனைவி புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பாலாஜியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ