ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
புதுச்சேரி: கூடப்பாக்கம் செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சங்கர், 55; ஆட்டோ ஓட்டுநர். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். மேலும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டு சமையலறையில் உள்ள கதவின் மேல் கம்பியில் நைலான் கயிற்றால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.