உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ ஓட்டுநர் சங்க கூட்டம்

ஆட்டோ ஓட்டுநர் சங்க கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் உரிமையாளர் கள் சங்கம் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாநிலக்குழு அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சமீபத்தில் உயிரிழந்த சங்க கிளை உறுப்பினர்கள் மர்ஷேல் வெனான்ஸ், துளசிங்கம், குமரவேல் ஆகியோர் குடும்பத்திற்கு சங்கத்தின் குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து தாலா ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.தொடர்ந்து நடந்த கூட்டத்தில், அமைப்பு சாரா நலச்சங்கத்தில், கடந்த, 8 ஆண்டுகளாக வழங்கப்படும், தொழிலாளர் மரண உதவித் தொகையை தொழிலாளர் குடும்பங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை