மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
28-Nov-2024
மன்னிப்பு கேட்டதால் விடுவிப்புபுதுச்சேரி: போலியாக விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட ஆட்டோ டிரைவர்கள் மன்னிப்பு கேட்டதால் விடுவிக்கப்பட்டனர். புதுச்சேரியில் கன மழை காரணமாக கடந்த 12 மற்றும் 13ம் தேதி பள்ளி கல்லுாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்தார். ஆனால் கடந்த 11ம் தேதி அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவிப்பதற்கு முன்னதாக, 12ம் தேதி பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு போல வாட்ஸ் ஆப்புகளில் தவறான தகவல் பரவியது. இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், போலியான விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது, முத்தியால்பேட்டை சின்னையாபுரம் ஐஸ்வர்யா ராஜ் மற்றும் கலைவாணன் என தெரியவந்தது. ஆட்டோ டிரைவர்களான இருவரும் விளையாட்டிற்காக, பழைய அமைச்சரின் அறிவிப்பு செய்தி குறிப்பை எடிட் செய்து அனுப்பியது தெரியவந்தது. இருவரையும் சைபர் கிரைம் போலீஸ் பிடித்தனர். இருவரும் தவறுதலாக செய்ததாகவும், புதுச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக வீடியோ வெளியிட்டனர். அதனை ஏற்று இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
28-Nov-2024