ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் சி.என்.ஜி., கேஸ் நிரப்பும் நிலையம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில் கேஸ் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு சி.என்.ஜி., கேஸ் நிரப்பும் பங்க் மேட்டுப் பாளையம் போக்குவரத்து முனையம் இந்தி யன் ஆயில் பங்கில் இயங்கி வருகிறது. இங்கு ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் சி.என்.ஜி., கேஸ் நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் புதியதாக கடந்த 1ம் தேதி முதல் புதுச்சேரியில் துப்புர பணி மேற்கொள்ளும் கிரீன் வாரியர்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கு மட்டுமே கேஸ் நிரப்பபடும், மற்ற வாகனங்களுக்கு கேஸ் நிரப்ப முடியாது என பங்க் தரப்பில் கூறப்பட்டது.இதனை கண்டித்து ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்ப வலியுறுத்தி நேற்று மாலை ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் பங்க் உரிமையாளரிடம் உடனடியாக அனைத்து வாகனங்களுக்கும் கேஸ் நிரப்ப வலியுறுத்தினர். அதன்பேரில், இரவு 8 மணிக்கு காத்திருந்த வாகனங்களுக்கு கேஸ் நிரப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.