கராத்தே போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா
புதுச்சேரி:தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா கவுன்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.அகில இந்திய கராத்தே சங்கம் சார்பில், 32 வது தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி கெலோகன் தானாபாத் உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.இப்போட்டியில் 15 பேர் கொண்ட புதுச்சேரி மாநில கராத்தே அணி கலந்து கொண்டனர். இதில் சுவைரா, சுபைதா, சுகைரா, பாத்திமா பர்வீன், லோகேஷ், சுப்ரியா, முகமது ரியாஸ் ஆகியோர் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்றனர். வெற்றி பெற்ற புதுச்சேரி மாநில கராத்தே அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நேற்று முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு, அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் வளவன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்க இணை செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கராத்தேச சங்க நிர்வாகிகள் ஆளவந்தார், வெங்கடாஜலபதி, பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.