உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமூக ஈடுபாடு திட்டம் குறித்து விழிப்புணர்வு

சமூக ஈடுபாடு திட்டம் குறித்து விழிப்புணர்வு

புதுச்சேரி: வேல்ராம்பட்டு சாரதாகங்காதரன் கல்லுாரியில் வணிக நிறுவன செயலறிவியல் துறை சார்பில், சமூக ஈடுபாடு திட்டம் குறித்து பொதுமக்களிடம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமூக ஈடுபாடு திட்டம் குறித்த பாடப்பகுதியின் ஒரு அங்கமாக, கல்லுாரியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், நல்லவாடு, புதுக்குப்பம், தவளக்குப்பம் ஆகிய கிராம பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேராசிரியர் முரளிதரன் மேற்பார்வையில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போதையில்லா புவியும், போதையின் தீமைகள் பற்றியும், பிளாஸ்டிக்கினால் விலங்குகள், பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஆரோக்கிய உணவுகள், இயற்கையை பாதுகாப்பது குறித்தும் பொதுமக்களிடம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை