மேலும் செய்திகள்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
27-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்புநில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் சார்பில்,விபத்தில்லா பசுமை தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் செல்வமணிகண்டன் வரவேற்றார்.பாஸ்கர் எம்.எல்.ஏ.,ல விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். காங்., கமிட்டி விவசாய அணி தலைவர் முருகன், எழுத்தாளர் ராமநாதன், எம்.ஜி.ஆர்., பொதுநல பேரவை நிர்வாகி சிவா, செம்படுகை நன்னீரகம் நிறுவனர் ராமமூர்த்தி, வட்டார மகிளா காங்., தலைவி மகேஸ்வரி, செந்தில்குமார், சிவாஜி சங்கர், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் அருகே துவங்கிய சைக்கிள் பேரணி, வீராம்பட்டினம் சாலை, ராதாகிருஷ்ணன் நகர், காக்காயன் தோப்பு, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், ஓடைவெளி மனவெளி, சுப்பையா நகர் வழியாக, மாதா கோவில் சந்திப்பு அருகே நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை சீனிவாசன், விஜயகுமார், தாமரை வாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
27-Oct-2024