உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

புதுச்சேரி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மகளிர் மேம்பாட்டுக்கான மாவட்ட மையம், ஏனாம் கிளை சார்பில் 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மண்டல நிர்வாகி மவுனிசாமி தலைமை தாங்கினார். மதர் தெரசா நர்சிங் பள்ளி மற்றும் ஐ.டி.ஐ., மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதில், பங்கேற்றவர்களை சதுப்புநிலக் காடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட உயரமான மர நடைபாதையின் வழியாக தீவு எண்.3க்கு அழைத்து சென்று, விரிவுரையாளர்கள் மூலம் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.மேலும், கைப்பந்து, லெமன் ஸ்பூன் ரேஸ், கயிறு இழுத்தல், இசை நாற்காலி முதலிய போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஏனாம் பொறுப்பாளர் முரளிதரன், ரெய்யா ஸ்ரீனிவாஸ், கண்காணிப்பாளர் சத்யநாராயணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை