மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை
04-May-2025
திருபுவனை: புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பேரவை சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதே நமது வலிமை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மத்திய மாநில அரசுகளின் விளக்கக் கூட்டம் பி.எஸ் பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பு ஆசிரியர் சுரேஷ், வாஞ்சிலிங்கம் ,முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். முரளிதாஸ் முன்னிலை வகித்தார். திருநாவுக்கரசு வரவேற்றார். நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்தும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் விளக்கிப் பேசினார். கூட்டத்தில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.முடிவில் கணபதி நன்றியுரையாற்றினார்.
04-May-2025