மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
புதுச்சேரி: கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, இந்திரா நகர் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்தது.பள்ளி பொறுப்பு ஆசிரியை ஜெஸ்ஸி வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா, பள்ளி துணை முதல்வர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுகாதார மேற்பார்வையாளர் வாசுகி, உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் தொழுநோய் அறிகுறிகள், சிகிச்சை முறை குறித்து விளக்கினர். சுகாதார உதவியாளர் ஜெகநாதன் தொழு நோய் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். செவிலியர் தனலட்சுமி நன்றி கூறினார்.
27-Jan-2025