உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சைல்டு லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலமாக நடந்த சைல்டு லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆசிரியர் சரவணன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். துறையின் ஒருங்கிணைப்பாளர் நாகவல்லி, கங்காதரன், விமலா, கருத்தாளர் உளவியல் குடும்ப ஆலோசகர் கண்ணன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வளர் இளம் பருவத்தில் ஏற்படும் பிரச்சனைகள், சமுதாயத்தில் நடக்கும் சிறார் திருமணத்தை எவ்வாறு சைல்டு லைன் உதவியுடன் தடுத்து நிறுத்துவது, பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, பிரச்சனைகளுக்கு உள்ளான குழந்தைகளுக்கு எவ்வாறு கவுன்சிலிங் கொடுப்பது குறித்து கருத்துரையாற்றினர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் வெரோனஸ் விஜயலட்சுமி, கணேசன், செந்தில்குமார், சித்திரை செல்வி, புஷ்பலிங்கம், பெருமாள், செந்தில் குமரன், சுந்தரி, மதிவாணன், தனிகைக்குமரன், அலுவலக உதவியாளர் வரதராசு ஆகியோர் செய்திருந்தனர். தமிழாசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !