உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சேவா பக்வாடா (2026) முன்னிட்டு, மேரா யுவ பாரத் புதுச்சேரி சார்பில், அடுத்த மாதம் 2ம் தேதி வரை இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துாய்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று முன்தினம், மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (18ம் தேதி) கிறிஸ்ட் கல்லுாரியில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு நடந்தது. நிகழ்ச்சியில், டாக்டர்கள் அருண் நாகலிங்கம், சந்திருதேவன், பேராசிரியர் சுக்கா ஷாலேம் ராஜூ உட்பட மேரா யுவ பாரத் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை