உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 

கூட்டுறவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 

புதுச்சேரி: கலித்தீர்த்தாள்குப்பம், காமராஜர் கலைக் கல்லுாரியில் வணிகவியல் துறை மற்றும் நாட்டுநலப் பணித் திட்டம் சார்பில், ‘கூட்டுறவுகள் – நிலையான எதிர்காலத்திற்கான அடுத்த தலைமுறையை வலுப்படுத்துதல்’ தலைப்பில் இளைஞர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கதிர்வேல் தலைமை தாங்கி, கூட்டுறவு இயக்கத்தின் பங்கு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். சென்னை, நடேசன் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றும் கனிமொழி கலந்து கொண்டு கூட்டுறவு இயக்கத்தின் முக்கியத்துவம், இளைஞர்களின் பங்களிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவு வாய்ப்புகள் குறித்து பேசினார்.  வணிகவியல் துறை பேராசிரியர் செந்தமிழ் ராஜா, கூட்டுறவுத் துறையின் பங்கு, அதன் பங்களிப்பு மற்றும் எதிர்காலத்தில் இளைஞர்கள் கூட்டுறவுத் துறையில் எவ்வாறு தொழில்முனைவோராக உருவாக முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தங்களது நவீன தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத் திறன்களைப் பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினார். நாட்டு நலப் பணித் திட்ட பேராசிரியர் உதயகீதா நன்றி கூறினார். வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை