உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அஞ்சலக கோட்டத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

அஞ்சலக கோட்டத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி : புதுச்சேரி அஞ்சலக கோட்டம் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ஒவ்வொரு வீட்டிலும், தேசிய கொடி' திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவியா கொடிசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் திரளான அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டு, வீடுதோறும் தேசிய கொடி ஏற்றுவதை வலியுறுத்தி, வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை துணை அஞ்சலக கண்காணிப்பாளர், தலைமை அஞ்சலகத் தலைவர் பாலசுப்ரமணியன், நம்பிராஜன், ரட்சகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !