உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு நடைபயணம்

விழிப்புணர்வு நடைபயணம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் இயக்கம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் போதையில்லா இளைய சமுதாயம், வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே துவங்கி கம்பன் கலையரங்கம் வரை நடந்த நடை பயணத்தை கவர்னர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார். அரசு செயலர் முத்தம்மா, இளைஞர் விளையாட்டு துறை இயக்குநர் சுதாகர், மை பாரத் இயக்கத்தின் புதுச்சேரி பொறுப்பாளர் திரவீன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை