ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம்
புதுச்சேரியில் 95,520 பேர் ரூ. 76.54 கோடிக்கு பயன்புதுச்சேரி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் புதுச்சேரியில் 95,520 பேர் ரூ. 76.54 கோடிக்கு பயன்பெற்றுள்ளனர்.ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டம், புதுச்சேரியில் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. இத்திட்டம் 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 6ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஆயுஷ்மான் பாரத் பக்வாரா என்ற நடைபயணம் நேற்று கொண்டாடப்பட்டது.சுகாதாரத்துறை சார்பில் நடந்த நடைபயணத்தை முதல்வர் ரங்கசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் (பொறுப்பு) செவ்வேல், துணை இயக்குநர் ரகுநாத், முன்னிலை வகித்தனர்.நடைபயணத்தில், பங்கேற்ற இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நடைபயணம் சட்டசபையில் துவங்கி, மிஷன் வீதி, புஸ்சி வீதி, கடற்கரை சாலை வழியாக காந்தி சிலையில் நிறைவு பெற்றது.திட்ட பொறுப்பாளர்கள் கூறுகையில்; ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதுச்சேரியில் 5,10,922 பயனாளிகள் பதிந்துள்ளனர். 95,520 பயணாளிகள் ரூ. 76.54 கோடி வரை பயன்பெற்றுள்ளனர். இதில் பயன்பெற்ற 63,212 பயனாளிகள் மருத்துவத்திற்கான ரூ. 42.12 கோடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செலுத்தி உள்ளது என தெரிவித்தனர்.