அசோலா வளர்ப்பு செய்முறை விளக்கம்
நெட்டப்பாக்கம்: மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு செய்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி டீன் முகமது யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட அலுவலர் திருமலை ஆகியோர் மேற்பார்வையில், கல்லுாரி மாணவிகள் கயல்விழி, காமேஸ்வரி, காவியா ஆகியோருடன் சக மாணவிகள் இணைந்து அசோலா வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். தொடர்ந்து அசோலாவை மாடுகள், ஆடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பலன்கள், செலவு குறைப்பு மற்றும் உற்பத்தி அதிகரிப்பு போன்ற நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் ஏரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.