உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு ஜாமின் மறுப்பு

மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு ஜாமின் மறுப்பு

புதுச்சேரி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரில் ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. தவளக்குப்பம் நல்லவாடு சாலை, தானாம்பாளையம் பகுதியில் செயின்ட் ஜோசப் தனியார் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவியை, அதே பள்ளியில் பணிபுரியும் முதலியார்பேட்டையை சேர்ந்த ஆசிரியர் மணிகண்டன், 25 என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மணிகண்டன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆஜரானார். இரு தரப்பு வாதத்தினை கேட்ட நீதிபதி சுந்தரமோகன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ