உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் நாளை இறைச்சி விற்க தடை

புதுச்சேரியில் நாளை இறைச்சி விற்க தடை

புதுச்சேரி: திருவள்ளுவர் தினமான நாளை (15ம் தேதி) புதுச்சேரியில் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணைர் சுரேஷ்ராஜ், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுவர் தினம் நாளை (15ம் தேதி) கொண்டப்படுகிறது. அதனால், உழவர்கரை நகராட்சி பகுதிகள் மற்றும் வில்லியனுார் கொம்யூனுக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி மீன் மற்றும் இதர மாமிச விற்பனை அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே அன்றை தினங்களில், கடைகளை திறந்து இறைச்சி விற்பனை செய்ய கூடாது. மீறினால் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி