கிராம பஞ்சாயத்துக்களில் வங்கி சிறப்பு முகாம்
புதுச்சேரி: ஊரக நிலைகளில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், மாநில வங்கியாளர்கள் குழுமம் சார்பில், கிராம பஞ்சாயத்துக்களில் சிறப்பு முகாம் நடந்தது. இந்திய அரசு நிதி சேவைகள் துறை மூலம், ஊரக நிலைகளில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, 3 மாத நிதி உள்ளடக்கம் முழுமை அடைவதற்கான பிரசாரம் நடைமுறைபடுத்த உள்ளது.அதன் ஒரு பகுதியாக,மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் சார்பில், கூனிச்சம்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் (மேற்கு), அரியூர் (தெற்கு), கரியமாணிக்கம், மடுகரை (கிழக்கு) ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம்களை நடத்தியது. இம்முகாமில், பிரதமரின், ஜன் தன் யோஜனா, ஜீவன் ஜோதி, பீமா யோஜனா, சுரக் ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா ஆகிய முக்கிய நிதி நலத் திட்டங்களில் சேவைகள் வழங்கப்பட்டன. கே.ஓ.சி., கணக்குகளுக்கான வாரிசு நியமனம், உரிமை கோரா வைப்புத் தொகைகள், டிஜிட்டல் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில், நிதி சேவைகள் துறை சார்பில்,இயக்குநர் சுர்ஜித் கார்த்திகேயன், மாநில அளவிலான வங்கியாளர் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்வெங்கட சுப்ரமணியன், புதுச்சேரி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.