உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேனீ வளர்ப்பு  செயல் விளக்கம்

 தேனீ வளர்ப்பு  செயல் விளக்கம்

புதுச்சேரி: வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டம் சார்பில், தேனீ வளர்ப்பு குறித்த செயல் விளக்கம் திருபுவனையில் நடந்தது. மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் நடராஜன் தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பில் தேனீக்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மா ணவர்கள் கலந்துகொண்டு, தேனீ வளர்ப்பின் சிறப்புகள் குறித்து விளக்கினர். முன்னதாக தேனீ பெட்டிகள் வழங்கவுள்ள விவசாயிகளுக்கு காலாப்பட்டில் தேனீக்களை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, இரண்டு தேனீ வளர்ப்பு பெட்டிகள் விவசாயி மகேஸ்வரன் தோட்டத்தில் பொ ருத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ